» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை!.. ஆணையரிடம் கோரிக்கை!

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 3:28:00 PM (IST)

தூத்துக்குடியில் போக்குவரத்து நெருக்கடி பிரச்சனைக்கு தீர்வு காண மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சமூக ஆர்வலர் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன், மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பி உள்ள மனுவில் "தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள காய்கறி மார்க்கெட் பகுதியில் சாலைகளின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதில் அருகில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் பேருந்துகள் அந்த வழியே கடந்து செல்ல முடியாமல் திணறி வருகின்றது. இதே பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பிரம்மாண்டமான வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. பணிகள் நிறைவுற்ற நிலையில் இதுவரை திறக்கப்படாததால், பெரிய காய்கறி மார்க்கெட் மற்றும் அதன் அருகிலுள்ள பூ மார்க்கெட் வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்த முடியாமல் ரோட்டோரங்களில், பொதுமக்கள் செல்வதற்கு இடையூறாக நிறுத்தி வைக்கின்றனர். 

மேலும் தூத்துக்குடியில் பிரதான சாலைகளான தமிழ்ச்சாலை, கிரேட் காட்டன் ரோடு, பழைய மாநகராட்சி விஇ ரோடு, சிதம்பரம் நகர், புதிய பேருந்து நிலையம், போல்பேட்டை உள்பட பிரதான சாலைகளின் இரண்டு பக்கமும் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கு மிகவும் இடைஞ்சலாக உள்ளது. இதனால் வாகனங்களை இடது புறத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், இந்தப் பகுதிகளை ஆய்வு செய்து, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முடிவுற்ற ரோடுகளில் வாகனங்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதோடு ஜெயராஜ் ரோட்டில் உள்ள வாகன காப்பகத்தை  திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.


மக்கள் கருத்து

TN69Feb 9, 2023 - 01:48:17 PM | Posted IP 162.1*****

அனைத்து மாநகர ஒரு வழிச்சாலையையும் 4 வழிச்சாலையாக மாற்றி அமைக்க போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி மேயர் மற்றும் ஆனணயர் அதிகாரிகள் வரை எப்பொழுதுதான் விழிப்புடன் செயல்படுவார்களோ!!!

தமிழன்Feb 8, 2023 - 06:07:44 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் உள்ள எல்லா சாலைகளும் சரிசெய்து விட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்துவிடும் .

makkalFeb 8, 2023 - 03:21:50 PM | Posted IP 162.1*****

bus stand katumana velaigal seekirama mudinji payanpatirku vanthaal intha pirachanai sari aagum

P.S. RajFeb 7, 2023 - 10:10:42 PM | Posted IP 162.1*****

one-way ல் வண்டி ஓட்டுகிறார்கள். விபத்து நடக்க வாய்ப்புண்டு. மக்களுக்கு இடைஞ்சல். போக்குவரத்து காவலர்கள் இதை கவனிக்க வேண்டும்.

ManiFeb 7, 2023 - 08:24:15 PM | Posted IP 162.1*****

ONE WAY ETHUNNU THERIYAVILLAI SIVAN KOVIL JUNCTION TO SOUTH SAMBANTHA MOORTHI STREET NO TRAFFICE POLICE

KumarFeb 7, 2023 - 07:15:30 PM | Posted IP 162.1*****

தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு அதிக இடைஞ்சல்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory