» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் தொடர்புடையவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

செவ்வாய் 7, பிப்ரவரி 2023 11:24:44 AM (IST)

கோவில்பட்டியில் கொலை வழக்கு மற்றும் நோய் பிரச்சனையில் அவதிப்பட்டு வந்த முதியவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பங்களா தெருவைச் சேர்ந்தவர், முத்தையா மகன் கருப்புசாமி (75). இவர் தனது உறவினரை  கம்பியால் தாக்கி கொலை செய்ததாக நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும், இவர்    சொரியாசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளார்.  இவரது மனைவி ராஜலட்சுமி சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளது. 

மேற்படி பிரச்சினைகள் காரணமாக வாழ்கையில் வெறுப்படைந்த கருப்பசாமி கோவில்பட்டி நல்லி ரயில் நிலையம் அருகே  சென்னை -  திருச்செந்தூர் விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவ குறித்து அவரது மருமகன் காமராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் தூத்துக்குடி இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory