» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை : போலீஸ் விசாரணை!
திங்கள் 6, பிப்ரவரி 2023 10:18:00 AM (IST)
தட்டார்மடம் அருகே நர்சிங் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள வாலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மகள் விஜயலட்சுமி (22), இவர் நாசரேத்தில் உள்ள ஒரு கல்லூரியில் நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். சரியாக படிப்பு வராததால் கல்லூரிக்கு செல்ல மாட்டேன் என்று கூறினாராம். ஆனால் அவரது தந்தை கண்டிப்பாக படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.
இதனால் மன வேதனையில் இருந்த விஜயலட்சுமி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து தட்டார்மடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பவுல் லோஸ் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தறனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர், போலீஸ்காரர் இறந்த வழக்கு: வேன் டிரைவருக்கு ஒரு ஆண்டு சிறை
புதன் 22, மார்ச் 2023 7:56:59 AM (IST)

ஆன்லைன் மோசடி: ரூ.4.67 லட்சம் பணம் மீட்பு
புதன் 22, மார்ச் 2023 7:44:40 AM (IST)

தி.மு.க. என்றாலே வன்முறை கட்சி : எச்.ராஜா பேட்டி
புதன் 22, மார்ச் 2023 7:34:24 AM (IST)

தூத்துக்குடியில் மறைந்த சப்-இன்ஸ்பெக்டர் உடலுக்கு காவல்துறையினர் அஞ்சலி!
புதன் 22, மார்ச் 2023 7:31:09 AM (IST)

எச்.ராஜா காரை முற்றுகையிட முயன்ற விசிக : கோவில்பட்டியில் பரபரப்பு
புதன் 22, மார்ச் 2023 7:25:59 AM (IST)

பள்ளி ஆசிரியரை தாக்கியதாக மாணவனின் பெற்றோர் உட்பட 4பேர் கைது!
செவ்வாய் 21, மார்ச் 2023 8:28:04 PM (IST)
