» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டி பிறந்த நாள் விழா

புதன் 1, பிப்ரவரி 2023 11:02:00 AM (IST)



தூத்துக்குடியில், முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாள் விழாவை  முன்னிட்டு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

முன்னாள் தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 128வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி போல்நாயக்கன் பேட்டை தாலுகா ரெட்டியார் சங்கத்தில் வைத்து ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் படத்திற்கு மாவட்ட தலைவர் பெத்துராஜ் தலைமையில் மாலை அணிவித்து மலர்கள் தூவி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தாலுகா ரெட்டியார் சங்க தலைவர் சண்முகராஜ், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ராஜகோபால், சங்க செயலாளர் அப்பனசாமி, ஜவகர்லால் நேரு, சரவணன்குமார்,  சிவசங்கர நாராயணன், குமார், சங்கரலிங்கம், ஆண்டிச்சாமி, ராமசாமி ரெட்டியார் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital










Thoothukudi Business Directory