» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடம்பாகுளம் உபரிநீர் கால்வாய் தூர்வாறும் பணிகள் செப்டம்பரில் முடிக்கப்படும்: கனிமொழி எம்பி தகவல்

சனி 28, ஜனவரி 2023 12:20:11 PM (IST)



கடம்பாகுளம் உபரிநீர் கால்வாய் தூர்வாறும் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும்  என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி  தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரை பேரூராட்சியில் கடம்பாகுளம் உபரிநீர் கால்வாய் தூர்வாரும் பணியினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மீன்வளம் - மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று துவக்கி வைத்து தெரிவித்ததாவது: மக்களின் நீண்ட கோரிக்கையினை ஏற்று கடம்பாகுளம் உபரிநீர் கால்வாய் ரூ.34 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தில் கரைகளை பலப்படுத்துதல், கால்வாய் முன்புறம் கரை அமைத்தல், வரத்து கால்வாய் பலப்படுத்துதல், மடைகளை சீரமைத்தல், சிறு பாலங்கள் அமைத்தல் என்று பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. இத்திட்டத்தினை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், நீர்வளத்துறை அமைச்சர் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல், துறையூர் - அங்கமங்கலம் சாலையை கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.84 இலட்சம் மதிப்பில் சீரமைத்து தரப்படும். இப்பணிகளுக்கு மாவட்ட பஞ்சாயத்து நிதியில் இருந்து ரூ.25 இலட்சம் ஒதுக்கீடு செய்து பயன்படுத்தப்படும்.

மேலும், விவசாயிகள் தங்களுக்கு தேவையான மணவை - ராஜபதி சாலையினை தங்களுடைய நிலத்தின் வழியாக மண் சாலையாக அமைத்துள்ளார்கள். அந்த சாலையினை தார் சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றித்தரப்படும். கடம்பாகுளம் உபரிநீர் கால்வாய் தூர்வாறும் பணிகள் செப்டம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு மீண்டும் பெருமைமிகு குளமாக மாற்றப்படும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.

அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்  தெரிவித்ததாவது: விவசாயிகளின் 20 ஆண்டு கால கோரிக்கையான கடம்பாகுளம் உபரிநீர் கால்வாய் தூர்வாரும் பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. கடம்பாகுளம் தண்ணீர் நிரம்பினால் இப்பகுதியில் இருபோகம் விளைச்சல் நடைபெறும். மேலும் புறையூர் பாலம் சரிசெய்யும் திட்டங்களும் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் அமைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தினை நிறைவேற்ற காரணமாக இருந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் நன்றி என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, ஏரல் வட்டாட்சியர் கண்ணன், தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் ஆ.மணிமேகலை ஆனந்த், ஆவின் தலைவர் சுரேஷ்குமார், கூட்டுறவு வங்கி தலைவர் உமரிசங்கர், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பத்மா, பொதுப்பணித்துறை தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் திரு,மாரியப்பன், உதவிப்பொறியாளர்கள் ஆதிமூலம், ரமேஷ்குமார், நவீன்பிரபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital




Thoothukudi Business Directory