» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம் வாக்காளர்களை அதிகளவு சேர்க்க வேண்டும் : மாவட்ட தேர்தல் அலுவலர் பேச்சு!

புதன் 25, ஜனவரி 2023 11:21:54 AM (IST)தூத்துக்குடியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகள் பங்கேற்ற பேரணியை ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார். 

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி இராஜாஜி பூங்காவில் இருந்து வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், இன்று (25.01.2023) கொடியசைத்து துவக்கி வைத்து தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ/மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி தெரிவித்ததாவது: தேசிய வாக்காளர் தினம் 2011ம் ஆண்டு தொடங்கப்பட்டு 13வது வாக்காளர் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இளம் வாக்காளர்களை அதிகமாக பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வாக்காளர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்ட நாளான ஜனவரி 25ம் தேதிதான் வாக்காளர் தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் சிறப்பு சுருக்க முறை திருத்த முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர்கள் சேர்ப்பு மற்றும் நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் நடைபெறும். ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதனைத்தொடர்ந்து தேசிய வாக்காளர் தினத்தில் இளம் வாக்காளர்கள் கௌரவிக்கப்படுவார்கள். 

வாக்காளர் தினத்தையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. பத்திரிக்கைகள் வாக்காளர் தினம் குறித்த விழிப்புணர்வை மாவட்டம் முழுவதும் கொண்டு சேர்த்து இளம் வாக்காளர்களை அதிகளவு சேர்க்க வேண்டும். அடுத்த வருடம் 2024ல் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணியானது ராஜாஜி பூங்காவில் தொடங்கி குரூஸ் பர்னாந்து சிலை அருகில் நிறைவடைந்தது. பேரணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, சார் ஆட்சியர் கௌரவ் குமார் வட்டாட்சியர்கள் செல்வகுமார் (தூத்துக்குடி), ரகு(தேர்தல்) மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory