» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் குரூஸ்பர்னாந்து மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழா: எம்.பி., அமைச்சர்கள் பங்கேற்பு

சனி 21, ஜனவரி 2023 4:14:51 PM (IST)தூத்துக்குடியில் ரூ.77.87 லட்சம் மதிப்பீட்டில் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி தமிழ் சாலை எம்.ஜி.ஆர். பூங்காவில் ரூ.77 இலட்சம் மதிப்பில் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்  மணிமண்டபம் அமைக்கும் பணிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்  கனிமொழி கருணாநிதி, சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தலைமையில் மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இன்று அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.

விழாவில் அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகரத்தந்தை என போற்றப்படும் ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் அவர்களுக்கு ரூ.77லட்சத்து 87ஆயிரத்து 343 மதிப்பில் மணிமண்டபம் அமைக்கப்படுகிறது. தூத்துக்குடி தமிழ் சாலையில் உள்ள மாநகராட்சி எம்.ஜி.ஆர். பூங்காவிற்கு கீழ்ப்புறம் 376.60 சதுர அடி பரப்பில் முழு திருவுருவச் சிலையுடன் கூடிய மண்டபமும், மண்டபத்தை சுற்றியுள்ள பகுதியில் பேவர் பிளாக், புல்வெளி மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ்,  தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையர் தி.சாருஸ்ரீ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன்;, மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, மாநகராட்சி துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ்;, ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் நலச்சங்கத்தினர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து

VINOTHJan 22, 2023 - 08:37:34 AM | Posted IP 162.1*****

FINALLY THOOTHUKUDI PEOPLE'S DREAM COMES TRUE! CONGRATULATIONS!!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory