» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தி.மு.க. கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது : துரை வைகோ

திங்கள் 5, டிசம்பர் 2022 7:49:58 AM (IST)

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று துரை வைகோ தெரிவித்தார்.  

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் உள்ள கி. ராஜநாராயணன் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தி.மு.க. கூட்டணியில் எந்த மாற்றமும் இருக்காது. ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது பெரிய சாபக்கேடு. அவரிடம் 20-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. 

கவர்னர் தனது கடமையை செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு, தனிப்பட்ட ஒரு இயக்கத்திற்கு, ஒரு சித்தாந்தத்திற்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுப்பதும், பணி புரிவதும் ஆரோக்கியமானது அல்ல. பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தினமும் தமிழக அரசு மீது அவதூறுகளை சொல்லி கொண்டிருக்கிறார். அவர் பொறுப்புள்ள அரசியல் கட்சி தலைவராக செயல்பட வேண்டும், என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சி துணை பொதுச் செயலாளர் தி.மு. ராஜேந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ்,கோவில்பட்டி நகரசபை தலைவரும் நகர திமுக செயலாளருமான கா. கருணாநிதி, கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், கி.ராஜநாராயணன் மகன் பிரவி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory