» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்: 50-க்கும் மேற்பட்ட திருமணம்
திங்கள் 5, டிசம்பர் 2022 7:44:56 AM (IST)
சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். விழா நாட்களிலும், வார விடுமுறை நாட்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுைற மற்றும் வளர்பிறை சுபமுகூர்த்த தினமான நேற்று திருச்செந்தூர் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்தனர்.
மேலும் கோவிலில் 50-க்கும் மேற்பட்ட மணமக்களுக்கு திருமணம் நடைபெற்றது. கோவில் வளாகம், மண்டபங்களிலும் ஏராளமான மணமக்களுக்கு திருமணம் நடந்தது. புதுமண தம்பதிகள் முருக பெருமானை வழிபட்டு இல்லற வாழ்வை தொடங்கினர். இதனால் கோவில் வளாகத்தில் ஆங்காங்கே புதுமண தம்பதிகளாகவே காட்சியளித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் லாரி செட் உரிமையாளர் அடித்துக்கொலை- போலீசார் விசாரணை
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 12:28:08 PM (IST)

மூத்த எழுத்தாளர் கலாபன் வாஸ் நூல் வெளியீட்டு விழா
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:50:58 AM (IST)

தூத்துக்குடியில் பில்டிங் காண்ட்ராக்டர் கார் திருட்டு: வாலிபர் கைது
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:42:03 AM (IST)

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 11:24:00 AM (IST)

தூத்துக்குடியில் குருத்தோலை ஞாயிறு பவனி : திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 7:54:15 AM (IST)

மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு
ஞாயிறு 2, ஏப்ரல் 2023 7:39:50 AM (IST)
