» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தாய் இறந்த நிலையில் கிராம உதவியாளர் தேர்வு எழுதிய மகள் : கோவில்பட்டி அருகே உருக்கம்!

ஞாயிறு 4, டிசம்பர் 2022 7:07:36 PM (IST)

கோவில்பட்டி அருகே பாம்பு கடித்து தாய் இறந்த நிலையிலும் அவரது மகள் மனம் தளராமல் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு எழுதினார்.

கோவில்பட்டி அருகே உள்ள குருமலை வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் காந்தி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி பசுபதி (60). விவசாய வேலைக்கு சென்று வந்தார். இவர்களது மகள் கனகரத்தினம் (35). இவரது கணவர் இருளப் பன், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்இறந்துவிட்டார்.இவர்களுக்கு வசந்த் (13), திவ்யா (8) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அங்குள்ள பள்ளியில் முறையே 9 மற்றும் 3ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

கணவரை இழந்த நிலையில் கனகரத்தினம் தனது தாய், தந்தை மற்றும் குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 10 தினங்களுக்கு முன் பசுபதி,வயல் வேலைக்கு சென்றார். அப்போது அவரை எதிர்பாராத விதமாக பாம்பு கடித்தது. இதையடுத்து அவரை, அங்குள்ளவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த பசுபதி நேற்று இறந்தார்.

இந்நிலையில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நடந்தது. இந்த தேர்வுக்கு ஏற்கனவே விண்ணப்பித்திருந்த கனகரத்தினம், தாய் இறந்த நிலையிலும் மனம் தளராமல் தனது குடும்பத்தின் வறுமையை கருத்தில் கொண்டு கோவில்பட்டி அருகே கீழ இறால் தனியார் கல்லூரி மையத்தில் நடந்த தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினார். அதன்பிறகு தாயின் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார். கணவரை இழந்தநிலையில் தாயின் வருமானத்தில் குடும்பத்தை பராமரித்து வந்த கனகரத்தினம், தற்போதும் தாயும் பாம்பு கடித்து இறந்த நிலையில் அவரது உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. 


மக்கள் கருத்து

NameDec 5, 2022 - 09:44:24 AM | Posted IP 162.1*****

Govt velai athan poirukan pvt la Vela pakuravan leave potu pourupan ithu yelam neesa

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory