» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் பரதவர்ம பாண்டியனின் 269வது பிறந்த நாள் விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஞாயிறு 4, டிசம்பர் 2022 6:53:07 PM (IST)தூத்துக்குடியில் முத்துக்குளித் துறையின் 16-வது மன்னரான சி.சி.தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியனின் 269 -வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

முத்துக்குளித்துறையின் 16-வது மன்னரான சி.சி.தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியனின் 269 -வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. விழாவில் தையல் எந்திரம், குடங்கள், சேலை என 400 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் பீட்டர் பர்னாண்டோ தலைமை தாங்கினார். கோரமண்டல் சமூக நற்பணி மன்றத்தின் ரோமால்டு, முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கத்தின் ஜான்சன், பியோ பரதர், எழுத்தாளர் பீட்டர் பிரான்சிஸ், தேவ் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மீனவ மக்கள் கட்சியின் தலைவர் அலங்கார பரதர், பேராசிரியை பாத்திமா பாபு, இந்திய மீனவர் சங்கத்தின் ராஜீ பரதர் ஆகியோர் நல உதவிகளை வழங்கினர். நிகழ்ச்சியில் குருஸ் பர்னாந்து நற்பணி மன்றத்தின் சசிக்குமார், சேவியர் சில்வர, டெரன்ஸ், கல்யாண சுந்தரம், அலாய், அமலன், சேரானந்தம், சுடலைமுத்து, தராஜ், பிரைட்டன், தினேஷ், ஆனந்த் பாண்டியன், வர்கீஸ், பிரவின், சல்வடோர், இனிகோ, தினேஷ், கிரிஸ்டோ, ராஜா, சுரேஷ், வளன், ஆண்ட்ரூஸ், அரவிந்த், உட்பட பலர் கலந்து கொண்டனர். ஹெர்மென் கில்டு வரவேற்றார். எழுத்தாளர் ஆசிரியர் நெய்தல் அண்டோ சிறப்புரை நிகழ்த்தினார். எட்வின் பாண்டியன் நன்றி கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory