» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தோட்டத்தில் வேலை செய்தபோது பாம்பு கடித்து பெண் பரிதாப சாவு

ஞாயிறு 4, டிசம்பர் 2022 11:15:40 AM (IST)

கொப்பம்பட்டி அருகே தோட்டத்தில் வேலை செய்தபோது பாம்பு  கடித்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கொப்பம்பட்டி அருகில் உள்ள வெங்கடேஷ்வரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மனைவி பகவதி (60), நேற்று தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கொப்பம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) சுஜித் ஆனந்த் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory