» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எழுத்தாளர் கி.ரா. நினைவு மணிமண்டபம்: முதல்வர் காணொலி மூலம் திறந்து வைத்தார்!

வெள்ளி 2, டிசம்பர் 2022 3:27:04 PM (IST)



கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ரா. நினைவு மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார். 

கரிசல் இலக்கியத்தின் தந்தையும், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளருமான கி.ரா. என அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் நினைவாக தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று திறந்து வைத்தார். 

இதைத்தொடர்ந்து கோவில்பட்டி மணிமண்டபத்தில் உள்ள கி.ரா. சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் கருணாநிதி, யூனியன் சேர்மன் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் மகாலெட்சுமி சந்திரன், சப்-கலெக்டர் மகாலெட்சுமி மற்றும் கி.ரா.வின் மகன்கள் திவாகரன், பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory