» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளம்பெண்ணுடன் பெற்றோர் விஷம் குடித்த சம்பவம்: தற்கொலைக்கு தூண்டியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு

வெள்ளி 2, டிசம்பர் 2022 3:12:52 PM (IST)

உடன்குடி அருகே இளம்பெண்ணுடன் பெற்றோர் விஷம் குடித்த சம்பவத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள சிறுநாடார்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரகுபதி (57). விவசாயி. இவரது மனைவி சத்யவதி (50). இவர்களது மகள் சந்தியா (27). ரகுபதி கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்தார். தற்போது அவர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பினர். இந்நிலையில் இவர்கள் 3 பேரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதைத்தொடர்ந்து அவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தினர். சந்தியாவிற்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு முதலூர் சுப்ரமணியபுரத்தை சேர்ந்த அரிகரசுதன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆகி 1½ வருடம் ஆன நிலையில் குழந்தை இல்லாததால், கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக அரிகரசுதன், அவரது அண்ணன் சத்தியசீலன் என்ற சதீஷ், அவரது மனைவி ராஜலட்சுமி, அரிகரசுதனின் தம்பி ஜீவஆனந்த் என்ற ஜனா உள்ளிட்டவர்கள் சந்தியாவிடம் கேட்டு வந்துள்ளனர். 

மேலும் அரிகரசுதன், சந்தியாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை சந்தியா தனது தந்தை ரகுபதியிடம் கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த தந்தை, தாய் மற்றும் சந்தியா ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக அரிகரசுதன், சத்தியசீலன், ராஜலெட்சுமி, ஜீவஆனந்த் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory