» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை மெகா மருத்துவ முகாம்!

வெள்ளி 2, டிசம்பர் 2022 12:26:55 PM (IST)

தூத்துக்குடியில் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

தூத்துக்குடி மாநகர திமுக இளைஞரணி சார்பாக ஸ்ரீபாலகிருஷ்ணா திரையரங்கம் அருகில் சோனா மஹாலில் நாளை (டிச.3) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறுகிறது. திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் எஸ்.ஆர் ஆனந்த சேகரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். 

சென்னை அப்போலோ மருத்துவமனை, காவேரி மருத்துவமனை, மதுரை மீனாட்சி மிஷன், நெல்லை அருணா கார்டியோ கேர், நாகர்கோவில் திரவியம் எலும்பு முறிவு, வாசன் கண் மருத்துவமனை ஆகிய மருத்துவமனை குழுவினர் சிகிச்சை அளிக்க உள்ளனர். இ.சி.ஜி, இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இரத்தப் பரிசோதனைகள் மற்றும் கண் பரிசோதனைகள் இலவசமாக பார்க்கப்படும் என தூத்துக்குடி மாநகர தி.மு.க இளைஞரணி செயலாளர் ஆனந்த கேப்ரியல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital






Thoothukudi Business Directory