» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.1.82 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கல்
வெள்ளி 25, நவம்பர் 2022 5:34:55 PM (IST)

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த யாதுமானவள் வழிகாட்டுதல் கருத்தரங்கில் ரூ.1.82 லட்சம் மதிப்பிலான பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
கோவில்பட்டியில் ரோட்டரி சங்கம் சார்பில் மாணவிகளுக்கான யாதுமானவள் வழிகாட்டுதல் கருத்தரங்கு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் ரவி மாணிக்கம் தலைமை வகித்தார். யாதுமானவள் திட்ட இயக்குனர் விஜயகுமாரி, ரோட்டரி மாவட்ட தலைவர் விநாயகா ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை ஜெயலதா வரவேற்றார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ஆசியா பார்ம்ஸ் பாபு நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார்.
சிறப்பு பேச்சாளர் ஜெயந்த ஸ்ரீபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யாதுமாணவள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் முன்னாள் மாணவி டாக்டர் கமலா மாரியம்மாள் சார்பில் புரொஜெக்டர் வாங்குவதற்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையும், முன்னாள் மாணவிகள் சங்கத்தின் சார்பில் ரூ.75 ஆயிரம் மதிப்பிலான ஜெராக்ஸ் மிஷினும், ரோட்டரி சங்க முன்னாள் துணை ஆளுநர் நாராயணசாமி தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு ஷூ வாங்குவதற்கு ரூ.7500ம் வழங்கப்பட்டது
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துச்செல்வன், வெங்கடேஷ், சீனிவாசன்,முத்து முருகன், மாரியப்பன், கிருஷ்ணசாமி, குணசேகரன், நாராயணசாமி, வீராச்சாமி, பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ரூத்ரத்னகுமாரி, சீனிவாசன், கண்ணன், இசை ஆசிரியை அமல புஷ்பம், தமிழ் ஆசிரியை கெங்கம்மாள் உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ரோட்டரி சங்க செயலாளர் மணிகண்டமூர்த்தி நன்றி கூறினார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிஎம் கிசான் திட்டத்தில் 13வது தவணை தொகை பெற அஞ்சல்துறை அழைப்பு
புதன் 8, பிப்ரவரி 2023 8:31:04 PM (IST)

பேருந்துகள் செல்ல இடையூறாக உள்ள பள்ளி சுற்று சுவரினை அகற்ற வேண்டும்: ஆணையர் வேண்டுகோள்
புதன் 8, பிப்ரவரி 2023 5:46:00 PM (IST)

வட்டாட்சியரின் குழந்தைகளை மனைவியிடம் ஒப்படைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 8, பிப்ரவரி 2023 4:05:00 PM (IST)

ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மறைவு : காவல் துறையினர் அஞ்சலி
புதன் 8, பிப்ரவரி 2023 3:06:15 PM (IST)

தூத்துக்குடியில் புதிய சிமெண்ட் சாலை பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
புதன் 8, பிப்ரவரி 2023 12:37:39 PM (IST)

விரால் மீன் உற்பத்தி தொழில்நுட்பம்: பிப்.17ல் ஒரு நாள் வளாக பயிற்சி
புதன் 8, பிப்ரவரி 2023 12:26:58 PM (IST)
