» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலி : தூத்துக்குடியில் பரிதாபம்!

செவ்வாய் 22, நவம்பர் 2022 10:47:40 AM (IST)

தூத்துக்குடியில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி டேவிஸ் புரத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் செல்வின் (27). இவர் அங்குள்ள ஒரு கம்பெனியில் காண்டாக்ட் லேபராக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் மோட்டார் பைக்கில் தூத்துக்குடி - திருச்செந்தூர் ரோடு, முத்தையாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி இவரது பைக் மீது மோதியது.

இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த செல்வின் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தையாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார். லாரியை ஒட்டி வந்த விளாத்திகுளம் அருகே உள்ள வௌவால்தொத்தி கிராமத்தைச் சேர்ந்த ரெங்கசாமி மகன் ராமகிருஷ்ணன் (40) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory