» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை மீண்டும் திறக்க வேண்டும்: வணிகர்கள் மகாஜன சங்கம்
ஞாயிறு 20, நவம்பர் 2022 7:01:10 PM (IST)
தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை துவக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் நிறுவனத் தலைவர் சந்திரன் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் அளித்த பேட்டி : கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மக்கள் சுகாதாரம் மற்றும் பொருளாதார பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை. பல வணிக நிறுவனங்கள், சிறு வேலை செய்பவர்கள் அனைவரும் பண இழப்பாலும், உயிர் இழப்பாலும் தங்கள் நிறுவனங்கள் மூடப்பட்டதாலும் பொது மக்கள் மிகுந்த வறுமை நிலையில் உள்ளார்கள்.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரி, மின் கட்டண உயர்வு மேலும் மக்களை பீதியடையச் செய்கிறது. இதிலிருந்து மீள மக்களுக்கு புதிய வலிமையைக் கொடுக்க, தமிழகம் முழுவதும் இரட்டிப்பாக உயர்த்தப்பட்ட சொத்து வரியை கட்டுப்படுத்தி கடந்த ஆண்டு சொத்து வரியுடன் சராசரியாக 10% வரி உயர்வை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் கடுமையான மின் கட்டண உயர்வால் மக்கள் கடும் இன்னல்களுக்குள்ளாகி வருகின்றனர்.
பிற மாநிலங்களில் கணக்கீடு செய்வது போல் தமிழகத்திலும் வீடு உபயோக மின்சாரத்திற்கு 300 யூனிட் இலவச கணக்கீடு செய்ய வேண்டும். தென் இந்தியாவின் துறைமுக தொழில் நகரமான தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் தொழிற்சாலை மீண்டும் அதன் உற்பத்தியை துவக்கவும், ஆலையை நவீன பாதுகாப்போடு மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்ற உத்திரவாதத்துடன் தூத்துக்குடி மாநகர மக்கள் சுகாதாரம், வியாபாரம், வேலைவாய்ப்பு, பணபுழக்கம் பெற ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை மக்கள் நலனுக்காகவும், வணிகர்கள் நலனுக்காகவும் நிறைவேற்றிட மத்திய மாநில அரசைக் கோருகிறோம். கோரிக்கைகளில் அரசுகள் அக்கறை காட்டவில்லையென்றால் அடுத்த கட்டமாக மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி சென்னையில் தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கம் முடிவு செய்துள்ளது என தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
ARASAMUTHUNov 21, 2022 - 10:39:16 AM | Posted IP 162.1*****
அப்படியே Copper பிசினஸ் பண்ணுறமாதிரி. போங்கப்பா! போய் பொட்டி கடைய தொறந்தமா, பீடி, சிகரட் , குட்கா வித்தமா, நாலு காசு பாத்தமான்னு இருங்கல .
தமிழ்ச்செல்வன்Nov 21, 2022 - 10:22:53 AM | Posted IP 162.1*****
இதுல யாரும் தூத்துக்குடி வணிகர்களே கிடையாது. டுபாக்கூர் பார்ட்டிகள்....
P.S. RajNov 20, 2022 - 07:49:50 PM | Posted IP 162.1*****
ஸ்டெர்லைட் நவீன பாதுகாப்புடன் இயக்க முடியாது. அப்படி இருந்தால் எப்போதே பாதுகாப்புடன் இயக்கி இருப்பார்களே ! வணிகர் சங்கம் இதை வணிக நோக்கத்துடன் பார்க்கிறது. ஆலையின் மூலம் அரசுக்கும் வணிகர் சங்கங்களுக்கு உண்டாகும் லாபத்தைவிட மக்களுக்கு சுகாதாரம் மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
மேலும் தொடரும் செய்திகள்

பிஎம் கிசான் திட்டத்தில் 13வது தவணை தொகை பெற அஞ்சல்துறை அழைப்பு
புதன் 8, பிப்ரவரி 2023 8:31:04 PM (IST)

பேருந்துகள் செல்ல இடையூறாக உள்ள பள்ளி சுற்று சுவரினை அகற்ற வேண்டும்: ஆணையர் வேண்டுகோள்
புதன் 8, பிப்ரவரி 2023 5:46:00 PM (IST)

வட்டாட்சியரின் குழந்தைகளை மனைவியிடம் ஒப்படைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 8, பிப்ரவரி 2023 4:05:00 PM (IST)

ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மறைவு : காவல் துறையினர் அஞ்சலி
புதன் 8, பிப்ரவரி 2023 3:06:15 PM (IST)

தூத்துக்குடியில் புதிய சிமெண்ட் சாலை பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
புதன் 8, பிப்ரவரி 2023 12:37:39 PM (IST)

விரால் மீன் உற்பத்தி தொழில்நுட்பம்: பிப்.17ல் ஒரு நாள் வளாக பயிற்சி
புதன் 8, பிப்ரவரி 2023 12:26:58 PM (IST)

MauroofNov 23, 2022 - 06:54:48 PM | Posted IP 162.1*****