» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ரூ.131 கோடியில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை : அமைச்சர் பெ.கீதாஜீவன் தகவல்
செவ்வாய் 25, அக்டோபர் 2022 4:32:08 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.131 கோடி மதிப்பில் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.20 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அவசர அறுவை சிகிச்சை அரங்கத்தினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் மாவட்ட ஆட்சித் தலைவர் கி.செந்தில்ராஜ் தலைமையில் இன்று (25.10.2022) திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெர்வித்ததாவது: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை மையத்தில் ஆண்டுக்கு சுமார் 60,000 பேர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். விபத்து, இருதய நோய், பிற காயங்கள், தீ விபத்து, பாம்புகடித்தல் போன்ற பல்வேறு அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளில் 80% பேர் குணமாகி செல்கின்றனர். 60 சதவீத பேர் உள்நோயாளிகளாக சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதில் சிலருக்கு காலதாமதம் இன்றி உடனடியாக கூடுதல் சிகிச்சை அளிப்பதற்காக ஐசியு தேவைப்படுகிறது. சிலருக்கு உடனடியாக அவசர சிகிச்சை தேவை என்பதாலும், அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை மேல்தளத்திற்கு கொண்டுச் செல்ல தாமதம் ஏற்படுவதினாலும் இந்த பிரிவில் அறுவை சிகிச்சை மையம் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றை கீழ்தளத்தில் அமைத்திட தமிழ்நாடு விபத்து மற்றும் அவசரசிகிச்சை பிரிவு மறு சீரமைப்பு பணியின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பில் நவீன வசதியுடன் கூடிய. 8 படுக்குகள் கொண்ட வார்டு, விரிவாக்கம் செய்யப்பட்ட அவசர அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் பணிமருத்துவர் அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடி மாவட்ட ஏழை எளிய மக்கள் சிறப்பு சிகிச்சைகளுக்காக பிற மாவட்டங்களுக்கு செல்வதை தவிர்ப்பதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் ககல்லூரியில் ரூ.131கோடி மதிப்பில் பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என அமைச்சர் பெ.கீதாஜீவன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி ஆட்சியர் கௌரவ் குமார், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவகுமார், உறைவிடம் மருத்துவர் சைலஸ் ஜெபமணி, அவசர சிகிச்சை பிரிவு தலைவர் ராஜவேல் முருகன், உதவி செயற்பாட்டாளர் (பொதப்பணித்துறை மருத்துவம்) கங்கா, வட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
balaOct 26, 2022 - 03:13:49 PM | Posted IP 162.1*****
muthalil gh irukkum left i sariseiyaum
TN69Oct 26, 2022 - 07:54:03 AM | Posted IP 162.1*****
ஈஎஸ்ஐ மருத்துவமனை ெஜயதுரை முன்னாள் தி.மு.க.எம்பி காலத்தில் இருந்து கிடப்பில போட்டீங்கலே ஏன்?
மேலும் தொடரும் செய்திகள்

பிஎம் கிசான் திட்டத்தில் 13வது தவணை தொகை பெற அஞ்சல்துறை அழைப்பு
புதன் 8, பிப்ரவரி 2023 8:31:04 PM (IST)

பேருந்துகள் செல்ல இடையூறாக உள்ள பள்ளி சுற்று சுவரினை அகற்ற வேண்டும்: ஆணையர் வேண்டுகோள்
புதன் 8, பிப்ரவரி 2023 5:46:00 PM (IST)

வட்டாட்சியரின் குழந்தைகளை மனைவியிடம் ஒப்படைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 8, பிப்ரவரி 2023 4:05:00 PM (IST)

ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மறைவு : காவல் துறையினர் அஞ்சலி
புதன் 8, பிப்ரவரி 2023 3:06:15 PM (IST)

தூத்துக்குடியில் புதிய சிமெண்ட் சாலை பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
புதன் 8, பிப்ரவரி 2023 12:37:39 PM (IST)

விரால் மீன் உற்பத்தி தொழில்நுட்பம்: பிப்.17ல் ஒரு நாள் வளாக பயிற்சி
புதன் 8, பிப்ரவரி 2023 12:26:58 PM (IST)

ராமநாதபூபதிOct 27, 2022 - 09:23:55 AM | Posted IP 162.1*****