» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் திரிந்த ஆதரவற்ற முதியோர்கள் மீட்பு: காப்பகங்களில் ஒப்படைப்பு!

சனி 24, செப்டம்பர் 2022 5:51:55 PM (IST)திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் ஆதரவற்ற முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் 40 பேர் இன்று மீட்கப்பட்டு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் நகராட்சி பகுதிகள் மற்றும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகத்தில் இருக்கும் ஆதரவற்ற முதியோர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளை மீட்டு காப்பகங்களில் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதனடிப்படையில் திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் புஹாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஆகியோர் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாகம் மற்றும் திருச்செந்தூர் நகராட்சி பகுதிகளில் ஆங்காங்கே இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் உழைத்து வாழ முடியாத மாற்றுத்திறனாளிகள் 40 பேரை கண்டறிந்து மீட்டு முதியோர் மற்றும் மனநல காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

கோவில்பட்டி ஆக்டிவ் மைன்ட் மனநல காப்பகத்திற்கு 6 பேர், நாசரேத் நல்ல சமாரியான் அறக்கட்டளைக்கு 4 பேர், ஆறுமுகநேரி லைட் முதியோர் இல்லத்திற்கு 30 பேர் என மொத்தம் 40 நபர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிகழ்வில் திருச்செந்தூர் நகராட்சி துணைத் தலைவர், திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் அவர்களின் உதவியாளர் வேல் ராமகிருஷ்ணன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், திருச்செந்தூர் வருவாய் ஆய்வாளர், கீழ திருசெந்தூர் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory