» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

செப்.27ல் வர்த்தக தொழில் சங்கத்தின் ரூபி ஜூபிலி விழா : தூத்துக்குடியில் நிர்வாகிகள் பேட்டி

சனி 24, செப்டம்பர் 2022 4:43:03 PM (IST)தூத்துக்குடியில் அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் ரூபி ஜூபிலி விழா வருகிற 27ஆம் தேதி (செவ்வாய்கிழமை) நடைபெற உள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் தமிழரசு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி : தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் 40 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரூபி ஜீபிலி விழா வருகிற 27ஆம் தேதி (செவ்வாய்கிழமை) மாணிக்க மஹாலில் நடைபெற உள்ளது. விழாவின் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வருகை புரிந்து சிறப்புரையாற்றுகிறார். 

சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர். விழாக்குழுத் தலைவர் ஜோ பிரகாஷ் வரவேற்புரை ஆற்றுகிறார். தலைவர் தமிழரசு தலைமையுரை ஆற்றுகிறார்கள். மறைந்த முன்னாள் நிறுவனர்களை கௌரவிக்கும் விதமாக வர்த்தக தொழில் சங்க நிர்வாக குழு உறுப்பினர்களின் படத்திற்கு மாலை அணிவித்து கௌரவிக்கிறார்கள்.

விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, வ.உ.சி துறைமுக ஆணையத்தின் தலைவர் ராமசந்திரன், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் மேலாண்மை இயக்குநரும் தலைமை நிர்வாகியுமான கிருஷ்ணன், ஸ்பிக் முழுநேர இயக்குநர் ராமகிருஷ்ணன், டிசிடபிள்யூ மூத்த செயல் துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன், தூத்துக்குடி அனல்மின் நிலையம் நரேந்திரா, மற்றும் அகில இந்திய வர்த்தக தொழில் சங்க முன்னாள் தலைவர்கள் ஜோ வில்லவராயர், மணி, உதய சங்கர் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். 

இறுதியாக அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத்தின் பொதுச் செயலாளர் சங்கர் மாரிமுத்து நன்றியுரை ஆற்றவுள்ளார். 40வது ஜீபிலி ஆண்டு விழாவினை முன்னிட்டு 25ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) அன்று காலை 6 மணியளவில் எம்ஜிஆர் பூங்காவிலிருந்து பழைய துறைமுகம் வரை சுமார் 200 பேர் நடைபந்தயத்தில் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவித்தார். முன்னாள் தலைவர் ஜோ பிரகாஷ், நிர்வாக செயலாளர் சங்கர் மாரிமுத்து, துணைத் தலைவர் விவேகம் ரமேஷ், மற்றும் நிர்வாகிகள் மெரின்டே வி.ராயர், ரமேஷ் சுப்புராஜ், பால் விநாயகம் ஆகியோர் பேட்டியின்போது உடனிருந்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory