» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் வாழ்த்து மழை : தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்

சனி 24, செப்டம்பர் 2022 8:46:42 AM (IST)

"நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மிகப்பெரும் மகிழ்ச்சியாக உள்ளது" என்று தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

சின்னத்திரை நட்சத்திரம் மகாலட்சுமி-திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் ஆகியோரது திருமணம் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூக ஊடகங்களிலும் பல்வேறு விமர்சனங்களை ரசிகர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர்-மகாலட்சுமி தம்பதி குல தெய்வ கோவிலுக்கு செல்வதற்காக தூத்துக்குடிக்கு வந்தனர். 

தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டியளித்த ரவீந்தர் சந்திரசேகர் கூறியதாவது: என்னுடைய திருமணம் பரபரப்பாக பேசப்பட்டது. உருவத்தை மட்டுமே பார்த்து ஒரு விஷயம் இவ்வளவு பெரிதாக பேசப்பட்டது. எனக்கே அதிர்ச்சிதான். இன்னொரு விஷயம் என்னவென்றால் இதனை ஒரு பெரிய திருப்பமாக பார்க்கிறேன். நாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மிகப்பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோன்று நான் தனித்தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் வதந்தி" என்று கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory