» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தலைமைஆசிரியர் இடமாற்றத்தை ரத்து செய்யகோரி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்!
சனி 24, செப்டம்பர் 2022 8:28:32 AM (IST)
ஓட்டப்பிடாரம் அருகே, பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றம் செய்ததை ரத்து செய்யக்கோரி மாணவர்களுடன் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே பெரியநத்தம் கிராமத்தில் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் 45 குழந்தைகள் பயின்று வருகிறனர். இந்தப் பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக சாமுவேல் துரை பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் எஸ்.கைலாசபுரத்தில் உள்ள பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடியாக இடமாற்ற உத்தரவை ரத்து செய்யது மீண்டும் அவரை பள்ளியில் பணிஅமர்த்த கோரியும் நேற்று பள்ளி முன்பு மாணவர்களும், பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, வட்டார கல்வி அலுவலர் பவானிந்தி ஈஸ்வரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவியரின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பெற்றோர் கூறுகையில், நல்ல முறையில் பணியாற்றி வந்த தலைமையாசிரியரை மீண்டும் பள்ளியில் பணியமர்த்த வேண்டும். இல்லையென்றால் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப மாட்டோம் என்று தெரிவித்தனர். இதைதொடர்ந்து பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று, தலைமை ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மக்கள் கருத்து
JOSEPH KANAGARAJSep 24, 2022 - 11:59:43 AM | Posted IP 172.7*****
கல்விஆண்டின் இடைப்பட்ட காலத்தில் இதுபோன்ற பணிமாறுதல்களை அரசும் மாவட்ட கல்வி அதிகாரியும் அனுமதிக்கக்கூடாது
ARASAMUTHUSep 24, 2022 - 11:25:02 AM | Posted IP 162.1*****
Tutyonline very much supporter of DSF Group?
ARASAMUTHUSep 24, 2022 - 11:22:19 AM | Posted IP 162.1*****
DSF துரைராஜ் என்ற பெரு வணிகர் Diocese முழுக்க தனது படத்தை மாட்டவேண்டும். நான்தான் எல்லாம் என்று சீரழித்தார். கடைசியில் அவர் முடிவு படு கேவலமாயிருந்தது. இப்போ இவர் மகன் கையில் எடுத்துள்ளான். இந்த DSF அணியில் பெரும்பாலும் தகுதி இல்லாதவர்களே உள்ளனர். மொத்தத்தில் தூத்துக்குடி நாசரேத் Diocese இல் நிர்வாகம் படு கேவலம். கடவுளின் நாமம் இந்த நாதாரிகளால் தூஷிக்கப்படுகிறது. பழிவாங்குதல் தான் இந்த DSF குரூப் வேலை.
மேலும் தொடரும் செய்திகள்

பிஎம் கிசான் திட்டத்தில் 13வது தவணை தொகை பெற அஞ்சல்துறை அழைப்பு
புதன் 8, பிப்ரவரி 2023 8:31:04 PM (IST)

பேருந்துகள் செல்ல இடையூறாக உள்ள பள்ளி சுற்று சுவரினை அகற்ற வேண்டும்: ஆணையர் வேண்டுகோள்
புதன் 8, பிப்ரவரி 2023 5:46:00 PM (IST)

வட்டாட்சியரின் குழந்தைகளை மனைவியிடம் ஒப்படைக்க தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 8, பிப்ரவரி 2023 4:05:00 PM (IST)

ஓய்வு பெற்ற சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மறைவு : காவல் துறையினர் அஞ்சலி
புதன் 8, பிப்ரவரி 2023 3:06:15 PM (IST)

தூத்துக்குடியில் புதிய சிமெண்ட் சாலை பணிகள்: மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
புதன் 8, பிப்ரவரி 2023 12:37:39 PM (IST)

விரால் மீன் உற்பத்தி தொழில்நுட்பம்: பிப்.17ல் ஒரு நாள் வளாக பயிற்சி
புதன் 8, பிப்ரவரி 2023 12:26:58 PM (IST)

விசுவாசிSep 25, 2022 - 04:06:05 PM | Posted IP 162.1*****