» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

போதையில் மயங்கிய ஊழியர்: இருளில் மூழ்கிய கிராமங்கள்

சனி 24, செப்டம்பர் 2022 8:25:18 AM (IST)

சாத்தான்குளம் அருகே துணை மின் நிலையத்தில் ஊழியர் போதையில் தூங்கியதால், மின்தடை ஏற்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கியது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தை அடுத்த பழனியப்புரத்தில் துணை மின் நிலையம் உள்ளது. இங்கிருந்து சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பழனியப்பபுரம், பேய்க்குளம் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டது. 

நீண்ட நேரமாக மின் வினியோகம் செய்யப்படாததால், தூக்கம் வராமல் அவதிப்பட்ட பொதுமக்கள் பழனியப்பபுரம் துணை மின் நிலையத்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். ஆனால் அங்கு எந்த ஊழியரும் தொலைபேசியை எடுத்து பேசவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் மற்றும் மின்வாரிய சக ஊழியர்கள் பழனியப்பபுரம் துணை மின் நிலையத்துக்கு சென்றனர். அப்போது அங்கு பணியில் இருந்த மின்வாரிய ஊழியர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. 

இரவு 10 மணியளவில் மின்வினியோகத்தை உயரழுத்த மின்கம்பியில் மாற்றி கொடுப்பதற்காக, மின்சாரத்தை துண்டித்த அவர் பின்னர் மீண்டும் மின் இணைப்பு வழங்காமல் போதையில் மயங்கியதாக தெரிகிறது. அவரை நீண்ட நேரமாக எழுப்ப முயன்றும் முடியாததால், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த சக ஊழியர்கள் பின்னர் மின் இணைப்பு வழங்கினர். இரவில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட திடீர் மின்தடையால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர்.


மக்கள் கருத்து

தமிழன்Sep 24, 2022 - 10:44:00 AM | Posted IP 172.7*****

வாழ்க டாஸ்மாக் , வாழ்க திராவிடம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory