» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

எனது படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இருக்கும் : நடிகர் வடிவேலு பேட்டி

வெள்ளி 23, செப்டம்பர் 2022 4:33:44 PM (IST)"தற்போது நான் நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாகவே இருக்கும்" என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறினார்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் செய்வதற்கு நேற்று இரவு வந்தார். அவர் கோயிலுக்கு சென்று மூலவர், சண்முகர், பெருமாள் உள்ளிட்ட சன்னதிகளில் வழிபட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "நான் தற்போது நாய் சேகர், ரிட்டன், மாமன்னன். சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.  இயக்குனர் மாரி செல்வராஜ் திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளேன். 

உடல்நலம் குறைவால் இருக்கும் நடிகர் போண்டாமணிக்கு இயன்ற உதவியை செய்வேன். என்னோடு தொடர்ந்து நடித்த துணை நடிகர்களுக்கான காமெடி டிராக் தற்போது இல்லாததால் முன்பு போல் அவர்களுடன் சேர்ந்து நடிக்க இயலவில்லை. தற்போது நான் நடித்துள்ள திரைப்படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாகவே இருக்கும். நாய் சேகர், ரிட்டன் படத்தில் பாடல்கள் பாடி உள்ளேன். அப்பாடல்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும்" இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மாயமான மாணவிகள் இருவர் மதுரையில் மீட்பு

வியாழன் 1, டிசம்பர் 2022 5:11:09 PM (IST)

Sponsored Ads


Thoothukudi Business Directory