» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கத்திமுனையில் பெண்ணை கடத்தி பலாத்காரம் : 2 வாலிபர்கள் கைது

வெள்ளி 23, செப்டம்பர் 2022 8:06:45 AM (IST)

ஆறுமுகநேரி அருகே கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகனேரியைச் சோ்ந்த திருமணமான 34 வயது பெண் திருச்செந்தூா் தனியாா் ஹோட்டலி­ல் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறாா். இவா் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்புகையில் வழக்கமான பேருந்து சென்றுவிட்டதாம். இதனால், பேருந்து நிறுத்தத்தில் அவா் காத்திருந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த அதே ஹோட்டலில் பணிபுரியும் ஆறுமுகனேரியைச் சோ்ந்த பாண்டி என்பவர் அவருக்கு உதவ முன்வந்துள்ளாா். 

அந்தப் பெண்ணை பைக்கில் அவா் ஏற்றிச்சென்றபோது, ஆறுமுகனேரி சோதனைச் சாவடி அருகே அவா்களை, லோடு ஆட்டோவில் வந்த காயல்பட்டினத்தை சோ்ந்த முத்துப்பாண்டி, சதாம் உசேன் ஆகியோா் கத்தியை காண்பித்து மிரட்டினராம். அப்பெண்ணை முத்துபாண்டி வலுக்கட்டாயமாக காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் அமலோற்பவம் வழக்குப்பதிந்து முத்துப்பாண்டி, சதாம் உசேன் ஆகிய இருவரையும் கைது செய்தாா். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

திருப்பிSep 23, 2022 - 10:01:03 AM | Posted IP 162.1*****

வெளிய விட்டுறுவானுங்க

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory