» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.300 கோடியில் பணிகள்: அமைச்சர் சேகர் பாபு தகவல்

வியாழன் 22, செப்டம்பர் 2022 9:01:42 PM (IST)திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.300 கோடியில் மேம்பாட்டு பணிகள் வருகிற 28ம் தேதி தொடங்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் ரூ.300 கோடி செலவில் பக்தர்களின் வசதிக்காக மெகா மேம்பாட்டு திட்ட பணிகள் தொடங்கப்பட உள்ளது. அத்துடன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா பணிகளும் ஒருங்கிணைந்து நடைபெற உள்ளது. இதையொட்டி திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

முன்னதாக அவர்கள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரையில் வடமாநிலங்களில் மட்டுமே சுமார் ரூ.150 கோடி அளவிலான திருக்கோவில் திட்ட பணிகள் நடைபெற்றுள்ளது. முதன்முறையாக தமிழகத்தில் திருச்செந்தூர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை மற்றும் எச்.சி.எல். நிறுவனம் சார்பில் மெகா திட்டப்பணிகள் நடைபெற உள்ளது. இதில் எச்.சி.எல். நிறுவனம் ரூ.200 கோடியும், கோவில் மற்றும் உபயதாரர் நிதி ரூ.100 கோடி மூலமும் இப்பணிகள் நடைபெற உள்ளது.

இந்த பணியை வருகிற 28-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். அதுதொடர்பாக கோவில் வளாகத்தில் ஆய்வு செய்துள்ளோம்.‌ மேலும் திருச்செந்தூர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடந்து தற்போது 12 ஆண்டுகள் கடந்த நிலையில் கும்பாபிஷேக பணிகளும் நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளி பக்தர்களும் கடலில் புனித நீராடி விட்டு, கோவிலில் சாமி தரிசனத்துக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது என்றார்.

ஆய்வின் போது, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர் கண்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் அருள்முருகன், இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை தலைவர் செங்குழி ரமேஷ், தி.மு.க. மாணவரணி மாநில துணை அமைப்பாளர் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், நகராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

kumarSep 23, 2022 - 01:33:56 PM | Posted IP 162.1*****

AA Raja hindukkalai patri mosamaga pesiyathirku kandanam therivikka mattengala hindu samaya aranilaya thurai amaichare??

முருகன் அடிமைSep 23, 2022 - 01:13:01 PM | Posted IP 157.4*****

திருச்செந்தூர் முருகருக்கு அரோகரா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மாயமான மாணவிகள் இருவர் மதுரையில் மீட்பு

வியாழன் 1, டிசம்பர் 2022 5:11:09 PM (IST)

Sponsored Ads


Thoothukudi Business Directory