» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அம்மன் கோவில்களில் தசரா திருவிழா 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது

வியாழன் 22, செப்டம்பர் 2022 3:55:55 PM (IST)

தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில்களில் தசரா திருவிழா வருகிற 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா வருகிற 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பத்தாம் திருவிழாவான அக்.5ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. 10 நாட்கள் தசாரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். 

இதுபோல் தூத்துக்குடியில் தெப்பக்குளம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில், வடபாகம் சந்தன மாரியம்மன் கோவில், மட்டக்கடை உச்சினி மாகாளியம்மன் கோவில், 2ம் ரயில்வே கேட் எஸ்.எஸ். பிள்ளை தெரு சண்முகபுரம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் உள்பட 25 கோவில்களில் தசரா திருவிழா வருகிற 26ஆம் தேதி தொடங்குகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மாயமான மாணவிகள் இருவர் மதுரையில் மீட்பு

வியாழன் 1, டிசம்பர் 2022 5:11:09 PM (IST)

Sponsored Ads


Thoothukudi Business Directory