» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தி.மு.க மாவட்ட செயலாளர் தேர்தல் : அமைச்சர் கீதாஜீவன் மனு தாக்கல்!!

வியாழன் 22, செப்டம்பர் 2022 3:16:17 PM (IST)தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் பதவிக்கு அமைச்சர் கீதாஜீவன் மனு தாக்கல் செய்தார். 

தி.மு.கவின் 15-வது உட்கட்சித் தேர்தல் நடந்து வருகிறது. ஒன்றியம், நகரம், பகுதி, வட்டம் என அத்தனை மட்டங்களிலும் தேர்தல் முடிந்துவிட்டது. இப்பதவிகளுக்கு தலைமையான மாவட்டச் செயலாளர் பதவிக்கான தேர்தல் செப்டம்பர் 22 முதல் 24 வரையில் நடைபெறுகிறது. இதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.முக. மாவட்டச் செயலாளர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. 

இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் கீதாஜீவன் விருப்ப மனு அளித்துள்ளார். தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர். இதுபோல் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். குமரி மாவட்ட செயலாளர் பதவிக்கு ஜோசப்ராஜ் மனு தாக்கல் செய்தார். தேர்ந்தெடுக்கப்படும் மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் இந்த மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மக்கள் கருத்து

NameSep 22, 2022 - 04:08:53 PM | Posted IP 162.1*****

Akka than always

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மாயமான மாணவிகள் இருவர் மதுரையில் மீட்பு

வியாழன் 1, டிசம்பர் 2022 5:11:09 PM (IST)

Sponsored Ads


Thoothukudi Business Directory