» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்ற கோரிக்கை : சங்குகுளி மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!

வியாழன் 22, செப்டம்பர் 2022 8:36:49 AM (IST)

தூத்துக்குடியில் சங்குகுளி மீனவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி பகுதியில் வெளிமாவட்ட சங்குகுளி தொழிலாளர்கள் தங்கி இருந்து சங்குகுளித்தல் தொழில் செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் வெளி மாவட்ட மீனவர்களுக்கும், உள்ளூர் மீனவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தூத்துக்குடியை சேர்ந்த சங்குகுளி தொழிலாளர்கள் நேற்று திடீரென கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரப ரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சங்குகுளி மீனவர்கள் கூறும்போது, தூத்துக்குடியில் பல நூற்றாண்டுகளாக முத்துகுளித்தல் தொழில் செய்து வந்தோம். தற்போது சங்கு குளித்தல் தொழிலில் ஈடுபட்டு உள்ளோம். இந்த தொழிலில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில் வெளிமாவட் டத்தை சேர்ந்த மீனவர்கள் தூத்துக்குடியில் தங்கி இருந்து இரவு பகலாக சங்கு குளித்து வருகின்றனர். 

இது தொடர்பாக கடந்த 6 மாதம் முன்பு  மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் அளித்தோம். இதுபோன்று தொடர்ந்து சங்கு குளித்தால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று தெரிவித்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வெளியூர் மீனவர்கள் அதிக அளவில் இருப்பதால், எங்களை தாக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. நாங்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு சென்றால் எங்களை சங்குகுளிக்க அனுமதிப்பது இல்லை. 

ஆனால் அவர்கள் இங்கு தங்கி இருந்து சங்கு குளிக்கின்றனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எங்களை காப்பாற்ற அரசு எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சங்குகுளி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து உள்ளோம். வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றினால் தான் கடலுக்கு செல்வோம். அதுவரை தொடர்ந்து உண் ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்து வோம் என்று கூறினர்.


மக்கள் கருத்து

Sep 22, 2022 - 09:36:49 AM | Posted IP 162.1*****

சில மீனவர்கள் யாராக இருந்தாலும் காசுக்காக ஆட்டைய போட்டு போவார்கள், அவர்கள் கடல்களை பாதுகாக்கமாட்டார்கள் காசுக்காக எல்லாத்தையும் சுரண்டி கார்பொரேட் கம்பெனிகளுக்கு விற்றுவிட்டு கடல் வளத்தையும் அழித்து விடுவார்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory