» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாநகராட்சி அதிகாரி என்று கூறி அவதூறாக பேசிய நபர்: தூத்துக்குடியில் பொதுமக்கள் அதிருப்தி!

செவ்வாய் 20, செப்டம்பர் 2022 3:11:31 PM (IST)தூத்துக்குடியில் மாநகராட்சி அதிகாரி என்று கூறிக்கொண்டு குடியிருப்புவாசிகளை அவதூறாக பேசிய நபரால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக  2008 முதல் 2011 வரை ஒரு வீட்டிற்கு ரூ.5ஆயிரம், முதல் 6 ஆயிரம் வரை வைப்புத் தொகை பெறப்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் கடந்தும் அந்த பணிகள் முடிக்கவில்லை. இப்போது பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்ட அதே தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. குறிப்பிட்ட தெருக்களில் மட்டும் கழிவுநீர் கால்வாய் மூடி போடுகின்றனர். சில தெருக்களில் திறந்த வெளி கழிவு நீர் கால்வாயாக அமைத்து வருகின்றனர். 

பாதாள சாக்கடைக்கு பணம் வாங்கிவிட்டு திறந்த வெளி சாக்கடை கால்வாய் அமைப்பது எப்படி சரியாகும்? என்று மாநகராட்சி ஊழியர்களிடம் பிரையண்ட் நகர் கிழக்கு பகுதி குடியிருப்பு வாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை அங்கு வந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் சாக்கடை கால்வாய் தோண்டுவதையும், மரங்கள் வெட்டுவதையும் போட்டோ எடுத்த குடியிருப்புவாசிகளின் செல்போனை பறித்து வைத்துக் கொண்டு பெண்களை அவதூறாகவும் பேசினாராம்.  

அவர் கட்சிக்காரரா, அதிகாரியா என்று தெரியாத நிலையில் படத்தில் இருக்கும் (கட்டம் போட்ட சட்டை) அந்த மர்ம நபர் அங்கு கூடியிருந்த குடியிருப்புவாசிகளை எச்சரித்து விட்டு கூட்டம் கூடுவதைக் கண்டு அந்த இடத்திலிருந்து எஸ்கேப் ஆகிவிட்டாராம். ஒரு தெருவில் பாதாள சாக்கடை, ஒரு தெருவில் மூடிய கழிவுநீர் கால்வாய், ஒரு தெருவில் திறந்த வெளி சாக்கடை, இடையில் மழைநீர் வடிகால் என்று ஸ்மார்ட் சிட்டியைப் பார்த்து குழம்பிக் கிடக்கும் மக்களிடம் மர்ம நபர்கள் தேவையற்ற வாக்குவாதம் செய்து அத்துமீறுவது தூத்துக்குடி மக்களிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.


மக்கள் கருத்து

முருகன் தூடிSep 22, 2022 - 11:30:57 AM | Posted IP 162.1*****

தோன்டி போடப்பட்ட சாலைகளால் மக்கள் பெரும் அவதி.பல கோடியில் பணிகள் ஆனால் பிரதான சாலைகளான தூடி..பாளையங்கோட்டை சாலையில் உள்ள குண்டு குழிகள் சரி செய்யப் படாதது ஏன்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மாயமான மாணவிகள் இருவர் மதுரையில் மீட்பு

வியாழன் 1, டிசம்பர் 2022 5:11:09 PM (IST)

Sponsored Ads


Thoothukudi Business Directory