» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோயிலில் ரூ.300 கோடியில் திருப்பணிகள் விரைவில் துவங்கும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு

வியாழன் 1, செப்டம்பர் 2022 3:36:22 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் ரூ.300 கோடியில் திருப்பணிகள் விரைவில் துவங்கும் என்று  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். 

தூத்துக்குடி மாவட்டம்; தேரிக்குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் - இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று பங்கேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: இன்று காலை திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர், மீன்வளம் - மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களின் பெருமுயற்சியால் குதிரைமொழி கிராமம் தேரிக் குடியிருப்பு அருள்மிகு கற்குவேல் அய்யனார் திருக்கோவிலுடைய மகா கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 

இங்குள்ள பக்தர்களின சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வைத்துள்ளார்கள். இக்கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொண்டு கோரிக்கை நிறைவேற்றப்படும். கோரிக்கையினை நிறைவேற்றும் பட்சத்தில் சுற்றுச்சுவர் உறுதித்தன்மையோடு கட்டப்படும். மேலும் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பயன்பாட்டிற்காக திருமண மண்டபம் வேண்டும் என்று அந்த பக்தர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றார்கள். 

அந்த கோரிக்கையை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக முடித்து தருவோம் எனக்கூறியிருக்கின்றோம். அதனைத்தொடர்ந்து அருள்பாலிக்கின்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்றைக்கு புதிதாக அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுருக்கின்ற 5 நபர்கள் பொறுப்பேற்கின்ற பணியும் அதைத்தொடர்ந்து அறங்காவலர் தேர்வு செய்கின்ற பணியும் மிகுந்த மகிழ்ச்சியோடு நடந்தேறியிருக்கிறது. அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில்முருகன் ஆகியோர் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள்.

அனைவரும் ஒருங்கிணைந்து திருப்பணிகளை முதலமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் வெகு விரைவில் தொடங்க இருக்கின்றார்கள். முதலமைச்சர் திருச்செந்தூர் கோவில் ரூ.300 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும் என்று சட்டமன்றத்திலே அறிவித்திருந்தார். திருப்பணிகளை அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து பணிகளை விரைந்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதலமைச்சர் அவர்களின் இந்த முயற்சிக்கு மேலும் மேலும் மெருகூட்டி இந்த பணிகளை அறங்காவலர் குழு தலைவர், உறுப்பினர்கள் விரைந்து முடிப்பார்கள் என்று திருச்செந்தூர் முருகன் சன்னிதானத்தில் இன்று மிகவும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் முழு முயற்சியில் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாவட்டத்தினுடைய மற்றொரு அமைச்சர் அவர்களும் இதில் ஆர்வத்தோடு திருப்பணியை முடிப்பதற்கு எல்லாவிதமான உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்திருக்கின்றார்கள். வெகு விரைவிலே முதலமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்படும். இதற்கு முழுமுதற் காரணம் முதலமைச்சர் என்பதை மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். 

நிச்சயமாக இந்த திட்டம் தொடங்கப்பட்டு; துவக்க நாளிலே முதலமைச்சர் எத்தனை காலங்களுக்குள் நிறைவேறும் என்று அறிவிப்பார். அந்த கால அளவிற்குள் முடிப்பதற்கு முயற்சிகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.  சொல்லாததையும், சொன்னதையும் செய்யும் அரசு இந்த அரசு என்பதை திருச்செந்தூர் கோயில் பணியில் நிரூபித்து காட்டுவோம். வெகு விரைவில் பக்தர்கள் தங்கும் விடுதிகளிலே உள்ள அறைகள் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory