» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம்: விஷம் குடித்த இளைஞர் சிகிச்சை பலனின்றி சாவு!

வியாழன் 18, ஆகஸ்ட் 2022 8:45:17 PM (IST)

சாத்தான்குளம் அருகே காதலித்த பெண்ணுக்கு வேறொருவருடன்  திருமணமானதால் விஷம் குடித்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகேயுள்ள மாவடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் திருப்பதி ராஜா(25). பனை ஏறும் தொழிலாளியான இவர் தற்போது சாத்தான்குளம் காமராஜ் நகரில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். இதனிடையே திருப்பதிராஜா, மாவடியை சேர்ந்த இளம் பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறொருவருடன் திருமணம் நிச்சயித்த நிலையில் சமீபத்தில் திருமணம் முடிந்துள்ளது. 

இதனால் விரக்தி அடைந்து காணப்பட்ட திருப்பதிராஜா, கடந்த 12ம்தேதி சாத்தான்குளத்தில் விஷம் குடித்த நிலையில் உடன்குடிக்கு சென்று அங்கு வசித்து வரும் உறவினர் சுயம்பு லிங்கம்(26) என்பவருக்கு செல்லிடபேசியில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து உறவினர், திருப்பதி ராஜாவை திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி திருப்பதிராஜா நேற்று இறந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

90s kidsAug 19, 2022 - 12:01:16 PM | Posted IP 162.1*****

Be like 90s kids

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Thoothukudi Business Directory