» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலம் மோசடி : வாலிபர் கைது!

வியாழன் 18, ஆகஸ்ட் 2022 5:15:09 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்து கிரையம் எழுதிக் கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் சங்கரநாராயணன். இவர் சங்கரப்பேரி பகுதியில் 1987-ம் ஆண்டு 9.51 சென்ட் நிலம் வாங்கினாராம். இந்த நிலத்துக்கான பட்டா பெறாமல் இருந்து உள்ளார். இதனால் அந்த இடம் முதன் முதலாக கிரையம் பெற்று இருந்த சீராளன் என்பவர் பெயரில் இருந்து உள்ளது. 

இதனை அறிந்த சீராளனின் மனைவி சமுத்திரவள்ளி, மகள்கள் ஜெயசுதா, காயத்ரி, மகன் ராம் மனோகர் ஆகியோர் சிலருடன் கூட்டு சேர்ந்து, அந்த நிலத்தை போலியாக பாகவிடுதலை ஆவணங்கள் உருவாக்கி உள்ளனர். அதனை பயன்படுத்தி அந்த இடத்தில் ஒரு பகுதியான 5.32 சென்ட் நிலத்தை டூவிபுரத்தை சேர்ந்த தாளமுத்து என்பவருக்கு கிரையம் செய்து கொடுத்து உள்ளனர். மீதம் உள்ள 3.91 சென்ட் நிலத்தை முள்ளக்காட்டை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு பொது அதிகாரம் அளித்து சொத்தை மோசடியாக அபகரித்து உள்ளனர்

இதுகுறித்து சங்கரநாரயணன் தனது நிலத்தை சமுத்திரவள்ளி, ராம்மனோகர், ஜெயசுதா, காயத்ரி, சிவக்குமார், தாளமுத்து ஆகியோர் கூட்டுசதி செய்து அபகரித்துள்ளதாக அளித்த புகாரின் பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன், உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சம்பத் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் தேவி தலைமையில் உதவி ஆய்வாளர் காமராஜ், தலைமைக் காவலர் அருணாச்சலம், முதல் நிலை காவலர்கள் சித்திரைவேல், பன்னீர்வேல் செல்வம் ஆகியோர் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொத்தை மோசடி செய்த ராம் மனோகரை (24) கைது செய்தனர்.  மேலும் இதுகுறித்து நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மாயமான மாணவிகள் இருவர் மதுரையில் மீட்பு

வியாழன் 1, டிசம்பர் 2022 5:11:09 PM (IST)

Sponsored Ads


Thoothukudi Business Directory