» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டியில் விமானப் பயிற்சி மையம்: தமிழக அரசு அறிவிப்பு ‍ ‍- மதிமுக வரவேற்பு

புதன் 10, ஆகஸ்ட் 2022 10:58:37 AM (IST)

கோவில்பட்டியில் விமான பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளதற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் விநாயகா ஜி. ரமேஷ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழகத்தில் பல விமான ஓடுதளங்கள் காலியாக உள்ளன. இதுபோன்ற எத்தனை விமான ஓடுபாதைகள் நம்மிடம் உள்ளன, அவற்றை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்த அரசு திட்டம் இட வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளது உள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 17 விமான ஓடுதளங்கள் உள்ளன. 

இதில் கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம், கானாடுகாத்தான், நெய்வேலி, கோவில்பட்டி ஆகியவை பயன்படுத்தப்படாத விமான ஓடுதளங்களாகும். மீதமுள்ளவை AAI அல்லது இந்திய ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்படுகின்றன.கயத்தாறு, உளுந்தூர் பேட்டை, சோழவரம் ஆகியவை இந்திய விமானப் படை கட்டுப்பாட்டில் உள்ளன. நெய்வேலி விமான ஓடுதளம் என்எல்சியிடம் உள்ளது. 

இந்நிலையில் கோவில்பட்டி விமான ஓடுதளத்தை முக்கியத் திட்டமாகக் கையில் எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. கோவில்பட்டி விமான ஓடுதளத்தை விமானப் பயிற்சி நிறுவனமாக நிறுவி தமிழக அரசு பயன்படுத்த திட்டமிட்ட வேண்டும், அதற்கான பணிகளும் தொடங்கப்படடு வேண்டும். கோவில்பட்டி விமான ஓடுதளம் பயன்பாடின்றி உள்ளதால் இதை எப்படி விமானப் பயிற்சி நிறுவனமாக மாற்றுவது என்பதை டிட்கோ (TIDCO) அதற்கான திட்டத்தை வகுக்கும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளது வரவேற்க கூடியது. 

இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு அமைந்தால் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்டங்களில் உள்ள இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள், கோவில்பட்டி பகுதியில் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ ஆகியோரின் நீண்ட கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக அரசு மேற்கொண்டு உள்ள நடவடிக்கையை மதிமுக வரவேற்பது மட்டுமின்றி, விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மாயமான மாணவிகள் இருவர் மதுரையில் மீட்பு

வியாழன் 1, டிசம்பர் 2022 5:11:09 PM (IST)

Sponsored Ads


Thoothukudi Business Directory