» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் தேர்தல் : அமைச்சர் கீதாஜீவனிடம் விருப்ப மனுக்கள் அளிப்பு!

புதன் 10, ஆகஸ்ட் 2022 10:18:32 AM (IST)தூத்துக்குடி மாநகர திமுக பிரதிநிதி தேர்தலை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவனிடம் திமுகவினர் விருப்பமனு அளித்தனர்.

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தி.மு.க. 15-வது பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே கிளை, வார்டு, வட்டம், பேரூராட்சி, நகராட்சி கழக தேர்தல் முடிவடைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒன்றியக் கழக நிர்வாகிகளுக்கான தேர்தல் இன்று (புதன்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. 

தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தேர்தல் ஆணையர் முன்னாள் எம்.எல்.ஏ ரவிசந்திரன், ஆகியோரிடம் விருப்ப மனுக்களை வழங்கினார்கள். தூத்துக்குடி மாநகரத்தில் செயலாளர் அவைத் தலைவர் பொருளாளர் மாவட்ட பிரதிநிதி தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. இதனை முன்னிட்டு போட்டியிட விருப்பமுள்ளவர்கள் வேட்பு மனுக்களை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், அவைத் தலைவர் ஏசுதாஸ், பொருளாளர் அனந்தையா, பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மேகநாதன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாநகர துணைச் செயலாளரும் கவுன்சிலருமான கீதா முருகேசன், கனகராஜ், கவுன்சிலர்கள் இசக்கிராஜா, பொன்னப்பன், தெய்வேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மாயமான மாணவிகள் இருவர் மதுரையில் மீட்பு

வியாழன் 1, டிசம்பர் 2022 5:11:09 PM (IST)

Sponsored Ads


Thoothukudi Business Directory