» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது

புதன் 10, ஆகஸ்ட் 2022 8:00:52 AM (IST)

விளாத்திகுளம் அருகே குடும்பத் தகராறில் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.மறையூர் வடக்கு தெருவை சேர்ந்த முனியசாமி மகன் முனீஸ்வரன் (32). இவரது மனைவி முனீஸ்வரி. இவர்களுக்கு திருமணமாகி சுமார் 7 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இதனிடையே கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனையடுத்து முனீஸ்வரி கோபித்து கொண்டு, கடந்த மாதம்14-ந் தேதி தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள பல்லாகுளத்திலுள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனையடுத்து முனீஸ்வரன் பல்லா குளத்திற்கு வந்து தகராறு செய்ததுடன், முனீஸ்வரியை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர். காயமடைந்த முனீஸ்வரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

மாயமான மாணவிகள் இருவர் மதுரையில் மீட்பு

வியாழன் 1, டிசம்பர் 2022 5:11:09 PM (IST)

Sponsored Ads


Thoothukudi Business Directory