» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இந்து சமய அறநிலையத் துறையை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்: 320பேர் கைது
செவ்வாய் 9, ஆகஸ்ட் 2022 9:20:30 PM (IST)
திருச்செந்தூரில் இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய 320 பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 2-ந்தேதி வள்ளிகுகை பகுதியில் ஒருவர் சத்ரு சம்ஹாரமூர்த்தி யாகம் நடத்தியதாகவும், இதனால் பக்தர்கள் பாதிப்படைந்ததாக கூறி, இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்தும் திருச்செந்தூர் பகத்சிங் பஸ்நிலையம் முன்பு நேற்று மாலை பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தலைவர் நாச்சியப்பன் தலைமை தாங்கினார்.
அப்போது மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், இங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை. மீறி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று கூறினார். அப்போது பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, மாவட்ட தலைவர் சித்ராங்கதன், வர்த்தக பிரிவு மாநில தலைவர் ராஜகண்ணன் உள்ளிட்டோர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலும் செய்தனர்.
இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக மாவட்ட பொது செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், மாநில மகளிரணி பொது செயலாளர் நெல்லையம்மாள், கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் உள்பட 320 பேரை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்!
புதன் 27, செப்டம்பர் 2023 12:49:18 PM (IST)

சாலையில் கண்டெடுக்கப்பட்ட அரிய வகை பவளப்பாம்பு: வனத்துறையிடம் ஒப்படைப்பு!
புதன் 27, செப்டம்பர் 2023 12:03:10 PM (IST)

திருச்செந்தூரில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு: போராட்டம் நடத்த ஊர் மக்கள் முடிவு
புதன் 27, செப்டம்பர் 2023 11:16:00 AM (IST)

தூத்துக்குடி அருகே பைக் மீது கார் மோதல்: வாலிபர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:54:11 AM (IST)

காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை : கோட்டாட்சியர் விசாரணை!
புதன் 27, செப்டம்பர் 2023 10:47:50 AM (IST)

பைக் விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பலி!
புதன் 27, செப்டம்பர் 2023 10:40:33 AM (IST)

kumarAug 11, 2022 - 11:59:26 AM | Posted IP 162.1*****