» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கடன் தொல்லை: தொழிலதிபர் மனைவி தற்கொலை!

சனி 6, ஆகஸ்ட் 2022 12:49:49 PM (IST)

கயத்தாறில் கடன் தொல்லையால் தொழிலதிபர் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்தவர் முருகேசன் (57). ஆட்டோமொபைல்ஸ், பர்னிச்சர் கடை, சிமெண்டு கடை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தநஷ்டத்திலிருந்து மீள்வதற்காக பலரிடம் கடன்வாங்கி தொழிலை நடத்தி வந்துள்ளார். ஆனாலும் தொழிலில் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காமல் கஷ்டப்பட்டுள்ளார். 

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. மனஉளைச்சல் இதுகுறித்து அவர் மனைவி மாரியம்மாளிடம்(54) வேதனையை தெரிவித்து வந்துள்ளார். தினமும் கடன் தொல்லை தாங்க முடியாமல் கணவர் மனமுடைந்து காணப்பட்டதை பார்த்த மாரியம்மாளும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகினார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாரியம்மாள் விஷம் குடித்து வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அன்டனி திலீப் மற்றும் போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று அங்கு மாரியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன மாரியம்மாளுக்கு மதன் என்ற மகனும், ரேவதி என்ற மகளும் உள்ளனர். கடன் தொல்லையால் தொழிலதிபர் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThoothukudi Business Directory