» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை வழக்கில் கைதான இருவர் உட்பட 4பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!!

வியாழன் 23, ஜூன் 2022 3:26:51 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி மற்றும் கஞ்சா வழக்குகளில் தொடர்டபுடைய 4 பேர் இன்று குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் மேலமுடிமண் பகுதியை சேர்ந்த லெட்சுமண பெருமாள் மகன் கார்த்திக் (23) என்பவரை கடந்த 27.05.2022 அன்று குடும்ப பிரச்சினை காரணமாக கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் அவரது உடன் பிறந்த சகோதரரான செல்வக்குமார் (25) என்பவரை ஓட்டப்பிடாரம் போலீசார் கைது செய்தனர். 

கயத்தார் அருகே வாகைத்தாவூர் பகுதியில் கடந்த 05.06.2022 அன்று  பொன்னுச்சாமி மகன் மந்திரம் (60) என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் அவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த தர்மராஜ் (எ) தர்மர் மகன் சந்தனகுமார் (எ) குமார் (33) என்பவரை கயத்தார் போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் பகுதியில் கடந்த 11.06.2022 அன்று  ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் ஆத்தூர் தலைவன்வடலி பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் மகன் மதன் (23) என்பவரை தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர். 

கழுகுமலை பகுதியில் கடந்த 24.05.2022 அன்று இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூரை சேர்ந்த தங்கசாமி மகன் தங்கராஜ் (25) உட்பட 3பேரை கழுகுமலை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். 

மேற்கண்ட வழக்குகளில் கைதான செல்வக்குமார், சந்தனகுமார் (எ) குமார், மதன், தங்கராஜ் ஆகிய 4 பேரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இன்று பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த ஆண்டு இதுவரை போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 28 பேர் உட்பட 119 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அக்.18ல் காளி வேட ஊர்வலம்!

வெள்ளி 29, செப்டம்பர் 2023 5:46:08 PM (IST)

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory