» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாலுமாவடியில் பேவர் பிளாக் சாலை: புதுவாழ்வு சங்கம் ரூ.4 லட்சம் நிதியுதவி!

வெள்ளி 20, மே 2022 5:11:05 PM (IST)நாலுமாவடி ஊராட்சியில் பேவர் பிளாக் சாலை அமைக்க புதுவாழ்வு சங்கம் சார்பில் ரூ.4 லட்சம் நிதி உதவி  வழங்கப்பட்டது.

தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் புது வாழ்வு சங்கம் மூலம் நாலுமாவடி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட புதுக்கிராமத்தில் உள்ள தெருக்களில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற உள்ளது. 

இதற்கான மக்கள் பங்களிப்பு தொகையான ரூ.4 லட்சத்தை புதுவாழ்வு சங்கத்தின் சார்பில் நிர்வாகி மருதநாயகம் தலைமையில் மணத்தி எட்வின், சாந்தகுமார் ஆகியோர் ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜனகரிடம் வழங்கினர். இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய பொறியாளர் வெள்ள பாண்டியன், ஆழ்வார் திருநகரி மேற்கு ஒன்றிய திமுக துணை செயலாளர் சிவசுப்பிரமணியன், மளவராய நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் ஆகியோர் உடன் இருந்தனர்.


மக்கள் கருத்து

P.S. Rajமே 20, 2022 - 08:48:55 PM | Posted IP 162.1*****

வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory