» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சரக்கு வேனில் கடத்திய புகையிலைப் பொருட்கள் பறிமுதல் : வாலிபர் கைது!
வெள்ளி 20, மே 2022 2:55:50 PM (IST)

கோவில்பட்டியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக சரக்கு வாகனத்தில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவுபடி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) சங்கர் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் தலைமையில் உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன் மற்றும் தலைமை காவலர் ஆனந்த் அமல்ராஜ், முதல் நிலை காவலர் பாண்டியராஜ் மற்றும் காவலர் சரவணக்குமார் ஆகியோர் நேற்று (19.05.2022) கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இனாம் மணியாச்சி பாலம் அருகில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கோவில்பட்டி இனாம் மணியாச்சி பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் சுப்புராஜ் (26) என்பதும் அவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக சரக்கு வாகனத்தில் கடத்தியதும் தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.20ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் உரங்கள் ஏற்றுமதி : மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், ஆய்வு
சனி 2, ஜூலை 2022 8:46:58 PM (IST)

திருமணமாகி 7மாதத்தில் இளம் பெண் மாயம்
சனி 2, ஜூலை 2022 8:40:16 PM (IST)

சர்வேகல், தடுப்பு வேலி சேதம்: தாய், மகன் மீது வழக்கு
சனி 2, ஜூலை 2022 8:36:07 PM (IST)

ரயில்வே பாதுகாப்பு சாதனை விளக்க விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி.
சனி 2, ஜூலை 2022 8:26:52 PM (IST)

தூத்துக்குடி காவல் துறையினருக்கு டிஜிபி பாராட்டு!
சனி 2, ஜூலை 2022 5:05:45 PM (IST)

புதுவாழ்வு பன்னோக்கு மிஷின் மருத்துவமனை திறப்பு விழா: நாலுமாவடியில் 7ம்தேதி நடைபெறுகிறது!
சனி 2, ஜூலை 2022 4:09:14 PM (IST)
