» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொடுஞ்செயல் எதிர்ப்பு தினம் : எஸ்பி தலைமையில் உறுதிமொழி ஏற்பு!

வெள்ளி 20, மே 2022 11:53:12 AM (IST)தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் ‘கொடுஞ்செயல் எதிர்ப்பு தின”  உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது. 

ஒவ்வொரு ஆண்டும் மே 21ம் தேதியன்று கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு இன்று (20.05.2022) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. 

இதில் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், மாவட்ட குற்ற பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம், குற்ற ஆவண காப்பக துணை கண்காணிப்பாளர் பிரேமானந்தன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ், மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து, காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், குற்ற ஆவண காப்பக காவல் ஆய்வாளர் ஜெரால்டின் வினு, தொழில்நுட்ப பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணசாமி, காவல்துறை அமைச்சுப்பணி நிர்வாக அதிகாரிகள் சிவஞானமூர்த்தி, ஆறுமுகம் அலுவலக கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, மாரியப்பன், மயில்குமார் மற்றும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தகவல் பதிவு உதவியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory