» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆதார் புதிய பதிவு, திருத்தம்: மே 21, 22ல் சிறப்பு முகாம்

வெள்ளி 20, மே 2022 11:47:24 AM (IST)

தூத்துக்குடி திருச்சிலுவை தொடக்க பள்ளியில் வருகிற 21, மற்றும் 22 ஆகிய தேதிகளில் ஆதார் சேவை முகாம் நடைபெற உள்ளது. 

தூத்துக்குடி விக்டோரியா எக்ஸ்டன்ஷன் சாலை, (ஸ்டான்லி டயக்னாஸ்டிக் சென்டர் எதிரில்), அமைந்துள்ள திருச்சிலுவை தொடக்கப் பள்ளியில் தூத்துக்குடி கோட்ட அஞ்சல்துறை மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் ஆதார் சேவை முகாம் வருகிற 21, மற்றும் 22 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இம்முகாமில், 0-5 வயது குழந்தைகளுக்கு புதிய ஆதார் எடுக்கப்படும். குழந்தையின் பிறப்பு சான்றிதழுடன் வரும் பெற்றோரின் ஆதார் அவசியம். 

இதுவரை ஆதார் இல்லாதவர்கள் புதிதாக பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ஆதார் தகவல் திருத்தம், பெயர், பிறந்த தேதி,  முகவரி, பாலினம், கைரேகை, கருவிழி பதிவேற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதாரில் மொபைல் எண் புதிதாக இணைக்கவும், மாற்றவும் செய்யலாம். ஆதாரில் உள்ள தகவல்களை திருத்தம் செய்ய கட்டணம் ரூ.50 பெறப்படும். அனைத்து அரசு சலுகைகளை பெறுவதற்கும் ஆதார் மிகவும் அவசியம். அதனால் பொதுமக்கள்  முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு புனித அந்தோனியார் ஆலயம் பங்குதந்தை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory