» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் ரூ.29 லட்சத்தில் பொது சுகாதார வளாகம்: அமைச்சர் திறந்து வைத்தார்

வெள்ளி 20, மே 2022 9:48:27 AM (IST)



திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் ரூ.29.41 லட்சத்தில் பொது சுகாதார வளாகத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் பக்தர்களின் வசதிக்காக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வைப்பு நிதியில் இருந்து ரூ.29.41 லட்சம் மதிப்பில் பொது சுகாதார வளாகம் புதுப்பிக்கப்பட்டது. மேலும் ரூ.14.72 லட்சம் மதிப்பில் நாழிக்கிணறு முதல் மூவர் சமாதி வரை நடைபாதையில் புதிதாக மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பொது சுகாதார வளாகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், திருச்செந்தூர் கோட்டாட்சியர் புகாரி, தாசில்தார் சுவாமிநாதன், கோவில் இணை ஆணையர் கார்த்திக், தக்கார் பிரதிநிதியும் ஓய்வு பெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், விடுதி மேலாளர் சிவநாதன், ஊரக வளர்ச்சித்துறை உதவி திட்ட அலுவலர் லீமாரோஸ், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவஆனந்தி, துணை தலைவர் ஏ.பி.ரமேஷ், திருச்செந்தூர் யூனியன் ஆணையாளர் பொங்கலரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து கிருஷ்ணராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புற்றுநோய் பரிசோதனை முகாம்



சென்னை அப்பல்லோ மருத்துவமனையின் ஒரு பிரிவான கேன்சர் சென்டர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட மருத்துவத்துறை இணைந்து நடமாடும் சுகாதார செயல் திட்டத்தின் கீழ் ஆறுமுகநேரி அன்னை எஸ்.பி.மஹால் திருமண மண்டபத்தில் பெண்களுக்கான மருத்துவ பரிசோதனை, புற்றுநோய் சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம், மற்றும் நடமாடும் சுகாதார செயல் திட்டத்தின் கீழ் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தியது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பொற்செல்வம் வரவேற்றார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்து பேசினார். மேலும் நடமாடும் செயல்திட்டத்தின் கீழ் உள்ள நவீன வசதிகள் கொண்ட வாகனத்தில் அளிக்கப்படும் சிகிச்சைகளை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அந்த வாகனத்தில் உள்ள மருத்துவ வசதிகளையும் அவர் பார்வையிட்டார். அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் பேபியோ, மகிபன், சுஜி, காயாமொழி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மெர்சினோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

Tonyமே 20, 2022 - 09:58:58 AM | Posted IP 162.1*****

தூத்துக்குடி மீனவர்களுக்கு போட வேண்டிய தடைகால நிவாரணம் மற்றும் சேமிப்பு பணம் எங்கே ... முதலில் அதை போடவும் .. உங்களால் உங்கள் முதல்வருக்கு தான் கெட்ட பெயர் .. புடுங்குறது பூரா தேவை இல்லாத ஆணி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory