» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மனைவி கொலை வழக்கில் கைதானவர் உட்பட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

வியாழன் 19, மே 2022 12:16:08 PM (IST)

தூத்துக்குடியில் மனைவி கொலை வழக்கில் கைதானவர் உட்பட 3 பேர் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

தூத்துக்குடி பூபல்ராயர்புரம் பகுதியை சேர்ந்த விஜி (40) என்ற பெண்ணை குடும்ப பிரச்சினை காரணமாக கொலை செய்த வழக்கில் அவரது கணவரான கிருஷ்ணன் (எ) ஆரோக்கிய சேவியர் மகன் சகாயவினோத் (38) என்பவரை கடந்த 19.04.2022 வடபாகம் போலீசார் கைது செய்தனர். இதுபோல் ஆறுமுகநேரி சீனந்தோப்பு விலக்கு பகுதியில் ஓருவரை அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் வடக்கு காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் முருகன் (எ) பாம்பே முருகன் (47), ஆறுமுகநேரி காமராஜபுரம் பகுதியை சேர்ந்த யோவான் மகன் ஜெபராஜ் (27) மற்றும் முத்து மகன் சதீஷ் (24) ஆகியோரை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர். 

மேற்கண்ட இவ்வழக்குகளில் தொடர்புடைய சகாய வினோத், முருகன் (எ) பாம்பே முருகன்  மற்றும் ஜெபராஜ் ஆகிய 3 பேரையும் எஸ்பி பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார். இதற்கான ஆணையை சம்பந்தபட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வழங்கினர். இந்த ஆண்டு இதுவரை போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் உட்பட 100 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதத்தில் 30 நாட்களில் 30 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory