» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் திருட்டு வழக்குகளில் வாலிபர் கைது : இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு!

வியாழன் 19, மே 2022 10:37:30 AM (IST)

தூத்துக்குடியில் பைக் திருட்டு, கடைகளில் பணம் திருட்டு உட்பட பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடியைச் சேர்ந்த  பழனிவேல்ராஜ் என்பவர் அவரது ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் பைக் கடந்த 11ம் தேதி 3வது மைல் பகுதியில் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து அவர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உதவி ஆய்வாளர் நாகராஜ பாண்டியன் வழக்கு பதிவு செய்தார். இவ்வழக்கு குறித்து உதவி ஆய்வாளர் முத்துகணேஷ் புலன்-விசாரணை மேற்கொண்டு, தூத்துக்குடி பிரையண்ட் நகர் 8வது தெருவைச் சேர்ந்த தனுஸ்கோடி மகன் கார்த்திக் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். 

இதில் அவர் 16ம் தேதி மந்திரமூர்த்தி  என்பவருக்கு சொந்தமான கூல்டிரிங்ஸ் கடையில் சிகரெட் பாக்கெட்டுகளையும், 7ம் தேதி லயன்ஸ் டவுண், சகாய மாதா பேக்கரியில் ரூ.30ஆயிரம் பணத்தையும்,  அட்ரினா ஆன்லைன் கார்னர் என்ற மொபைல் கடையில் ரூ.1500 மதிப்புள்ள மொபைல் போனையும், மேலசண்முகபுரம் பகுதியில் பல்சர் பைக்கையும்,  சிஜிஇ காலனியில் வெங்கடேஸ்வரா ஸ்டோர்சில் ரூ.25ஆயிரம் பணத்தை திருடியது என 5 வழக்குகளில் ஈடுபட்டு திருடியதாக ஒப்பு கொண்டார். இதனையடுத்து அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு தூத்துக்குடி, மாவட்ட சிறை, பேரூரணியில் நீதிமன்ற காவலில் உள்ளார். 

மேலும் 18.05.2022 ஆம் தேதியன்று இவ்வழக்கு சம்பந்தமாக மற்றொரு எதிரியான தூத்துக்குடியைச் சேர்ந்த இளஞ்சிறார் ஒருவரை கையகப்படுத்தப்பட்டு இளஞ்சிறார் கூர்நோக்கு இல்லத்தில் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேற்படி வழக்கின் சொத்துக்கள் அனைத்தும் எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் சொத்துக்கள் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இவ்வழக்கானது புலன் விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி எதிரி மற்றும் இளஞ்சிறாரை கைது செய்து மெச்சத்தகுந்த பணி செய்த உதவி ஆய்வாளர் முத்துகணேஷ் மற்றும் போலீசாரை காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.


மக்கள் கருத்து

JJDOHAQATARமே 19, 2022 - 10:59:20 AM | Posted IP 162.1*****

கைதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை. என்ன பிரயோஜனம். சரியான தண்டனை கிடைத்தால்தானே மீண்டும் அதே தவறை செய்ய மாட்டான். தவறுகள் குறையும். சங்கிலி அறுப்புக்கள் தொடர்ந்து நடக்கிறது. இப்படிப்பட்ட நபர்களின் கெண்டைக்கால் நரம்பை வெட்டிவிடுங்கள். எல்லாம் சரியாகிவிடும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory