» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை- திருச்செந்தூர் இடையே முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே தகவல்

புதன் 18, மே 2022 11:17:53 AM (IST)

மதுரை - ராமேஸ்வரம், திருநெல்வேலி - திருச்செந்தூர், செங்கோட்டை - திருநெல்வேலி ரயில் நிலையங்கள் இடையே  முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. 

ஏற்கனவே இந்த பிரிவுகளில் ஒரு முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பயணிகளின் வசதிக்காக தற்போது மேலும் ஒரு முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

1. மதுரை - ராமேஸ்வரம்

மதுரை - ராமேஸ்வரம் முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06651) மதுரையில் இருந்து காலை 06.35 மணிக்கு புறப்பட்டு காலை 10.15 மணிக்கு இராமேஸ்வரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் ராமேஸ்வரம் - மதுரை  முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06656) ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 06.05 மணிக்கு புறப்பட்டு இரவு 09.55 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் கீழ் மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி, ராஜ கம்பீரம், மானாமதுரை, சூடியூர், பரமக்குடி, சத்திரக்குடி, ராமநாதபுரம், வாலாந்தரவை, உச்சிப்புளி, மண்டபம் கேம்ப், மண்டபம், பாம்பன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

2. திருச்செந்தூர் -திருநெல்வேலி

திருச்செந்தூர் - திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் மே 30 முதல் இயக்கப்படும். திருச்செந்தூர் - திருநெல்வேலி  முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06674) திருச்செந்தூரில் இருந்து காலை 07.10 மணிக்கு புறப்பட்டு காலை 09.00 மணிக்கு  திருநெல்வேலி சென்று சேரும். 

மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - திருச்செந்தூர் முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06677) திருநெல்வேலியில் இருந்து மாலை 06.45 மணிக்கு புறப்பட்டு இரவு‌ 08.30 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும். இந்த ரயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

3. செங்கோட்டை - திருநெல்வேலி

செங்கோட்டை - திருநெல்வேலி - செங்கோட்டை முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து மே 30 முதலும் செங்கோட்டையில் இருந்து மே 31 முதலும் இயக்கப்படும். செங்கோட்டை - திருநெல்வேலி முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06682) செங்கோட்டையில் இருந்து காலை 06.40 மணிக்கு புறப்பட்டு காலை 08.50 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். 

மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - செங்கோட்டை முன்பதிவு இல்லாத விரைவு சிறப்பு ரயில் (06657) திருநெல்வேலியில் இருந்து மாலை 06.15 மணிக்கு புறப்பட்டு இரவு 08.35 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். இந்த ரயில்கள் தென்காசி, கீழப்புலியூர், பாவூர்சத்திரம், மேட்டூர், கீழ கடையம், ரவண சமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, கிழாம்பூர், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், காரைக்குறிச்சி, சேரன்மகாதேவி, பேட்டை, திருநெல்வேலி டவுன் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


மக்கள் கருத்து

ராஜா சிங்மே 20, 2022 - 08:37:23 AM | Posted IP 162.1*****

ஏற்கனவே இருந்த ரயில் தான் தற்போது டிக்கெட் விலை அதிகரித்து சிறப்பு ரயில் என்று பெயர் மாற்றப்பட்டது வருகிறது மக்கள் நலனில் அக்கறை இல்லாத ஒன்றிய அரசு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital








Thoothukudi Business Directory