» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தேர்வு

செவ்வாய் 1, பிப்ரவரி 2022 8:27:24 AM (IST)



சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் காவல் துறையினருக்கு இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 

தெற்கு மண்டலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் 2020 ஆம் ஆண்டு சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு விதமாக ஆக்டிவ் மைண்ட்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் தலைவர் தேன் ராஜா, தலைமையில் கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களை இனிப்பு வழங்கி பாராட்டினார்.

மேலும் காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன், ஆய்வாளர் சுஜித் ஆனந்த், மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் பொது மக்களுக்கு சிறந்த சேவை அளிக்க வாழ்த்தினர். இந்நிகழ்வில் தொண்டு நிறுவன நிர்வாக குழு உறுப்பினர் முத்து மாரியப்பன், ராமசுப்ரமணியன் உடற் கல்வி ஆசிரியர் நவீன் பாலாஜி, மேற்பார்வையாளர் மாடசாமி, கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

வே.எட்டப்பன்Mar 12, 2023 - 04:32:37 AM | Posted IP 162.1*****

கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையம் 60310இந்த காவல் நிலையத்தில் என் விபத்து வழக்கு FIR659பதியபட்டு வழக்கு CNR நம்பர் TNTT070003662018 முடிக்கபட்டது.விபத்தில் 100சதவீதம் ஊணமுற்று மரணவேதனையில் துடித்துகொண்டியிருக்கும் என் விபத்து வழக்கை சிறிய காலண்டர் வழக்கு என்று முடித்த காவல்துறைக்கு என்மரணவாக்குமூல வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory