» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கபடி விளையாட்டில் காயமடைந்தவர் திடீர் மரணம்!

வெள்ளி 21, ஜனவரி 2022 8:39:20 PM (IST)

தூத்துக்குடியில் கபடி விளையாட்டில் காயமடைந்த வாலிபர் திடீரென உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள பிள்ளையன் மனை வக்கூரைச் சேர்ந்தவர் சடையவீரன் மகன் மூக்கன் (37). தொழிலாளியான இவருக்கு மனைவி இசக்கியம்மாள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 16ம் தேதி அதே ஊரில் நடைபெற்ற கபடி போட்டியில் மூக்கன் பங்கேற்று விளையாடினாராம். அப்போது வயிற்றுப் பகுதியில் அடிப்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென வலி ஏற்பட்டுள்ளது. இதனால் உறவினர்கள் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதுகுறித்து மூக்கன் அண்ணன் மாரிமுத்து நாசரேத் போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ சுப்பிரமணியன் வழக்கு பதிந்து விசாரணைை நடத்தி வருகிறார். விளையாட்டில் ஏற்பட்ட காயம் குடற்பகுதியில் உள்காயமாக இருந்ததால் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory